"நடக்கட்டும் நம்புகிறோம்" - மனிதர் வாக்கு! "நம்புங்கள் நடக்கும்" - சித்தர் வாக்கு. திடமாய் உழைத்தும் வெற்றி இழந்திடின் தோற்றுப்போ! கர்ம பாரம் கரைந்திடும். தேவைக்காக இறைவனை தேடாமல், தேவையே நீதான் இறைவா என்றிரு. இறைவனுக்கு நன்றி சொன்னால், அதுவே குருதக்ஷிணையாகும். பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதை புரிந்துகொள்ளும் சக்தி உனக்கேதடா. நல்லவனாய் இல்லாவிடினும், நல்லதை செய்யாவிடினும், கெட்டவனாய் வாழ்ந்திடாதே, கெடுதலை செய்யாதே. மனமது செம்மையானால், மந்திரம் ஜெபிக்கவேண்டா! இருப்பதில் கொடுப்பது சிறப்பு. இருப்பதையே கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு. நல்ல விஷயங்களை செய்து வந்தால், யாமே அவனை தேடி செல்வோம். சமூகத்தில் இறையருள் நிலைக்கவே, பண்டிகைகளும் தான தர்மமும். நலம் எண்ணி, நலம் உரைத்து, நலம் செய்ய, நலமே நடக்கும். தர்மத்தின் வழி செல்லச் செல்ல, கர்மத்தின் வலி குறையுமப்பா. பொது நலமும், சத்தியமும், நற்சிந்தனையும் கொண்டு வாழ்கின்ற மனிதனுக்கு, எல்லா நாழிகையும் சுப நாழிகை தான். செய்கின்ற தர்மங்கள், ஒருவனின் இறையருளை கூட்டி, ஜென்ம பாபத்தை கழித்து, புண்ணியத்தை பெருக்கி, தேவை அற...