Sage agathiyar advice

 

  • "நடக்கட்டும் நம்புகிறோம்" - மனிதர் வாக்கு!  "நம்புங்கள் நடக்கும்" - சித்தர் வாக்கு.
  • திடமாய் உழைத்தும் வெற்றி இழந்திடின் தோற்றுப்போ! கர்ம பாரம் கரைந்திடும்.
  • தேவைக்காக இறைவனை தேடாமல், தேவையே நீதான் இறைவா என்றிரு.
  • இறைவனுக்கு நன்றி சொன்னால், அதுவே குருதக்ஷிணையாகும்.
  • பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதை புரிந்துகொள்ளும் சக்தி உனக்கேதடா.
  • நல்லவனாய் இல்லாவிடினும், நல்லதை செய்யாவிடினும், கெட்டவனாய் வாழ்ந்திடாதே, கெடுதலை செய்யாதே.
  • மனமது செம்மையானால், மந்திரம் ஜெபிக்கவேண்டா!
  • இருப்பதில் கொடுப்பது சிறப்பு. இருப்பதையே கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு.
  • நல்ல விஷயங்களை செய்து வந்தால், யாமே அவனை தேடி செல்வோம்.
  • சமூகத்தில் இறையருள் நிலைக்கவே, பண்டிகைகளும் தான தர்மமும்.
  • நலம் எண்ணி, நலம் உரைத்து, நலம் செய்ய, நலமே நடக்கும்.
  • தர்மத்தின் வழி செல்லச் செல்ல, கர்மத்தின் வலி குறையுமப்பா.
  • பொது நலமும், சத்தியமும், நற்சிந்தனையும் கொண்டு வாழ்கின்ற மனிதனுக்கு, எல்லா நாழிகையும் சுப நாழிகை தான்.
  • செய்கின்ற தர்மங்கள், ஒருவனின் இறையருளை கூட்டி, ஜென்ம பாபத்தை கழித்து, புண்ணியத்தை பெருக்கி, தேவை அற்றதை, வகுத்து வைக்கும்.
  • இழக்க இழக்கத்தான் ஒரு மனிதன் பெறுகிறான்.
  • பிறரை நிம்மதியாக வாழ வைத்தால், ஒருவன் நிம்மதியாக வாழலாம்.
  • ஒரு மனிதன், தன் இதயத்தை தவிர இறைவனுக்கு கொடுப்பதற்க்கென்று வேறெதுவும் இல்லை.
  • மனிதர்களிடம் பேசுவதே சித்தர்கள் செய்யும் பாபம்.
  • ஒருவன் செய்கின்ற பாபங்கள்தான் தசா,புக்தி,அந்தரமாக, ஏழரை சனியாக வருகிறது. இறைவன் அதனுள் சாட்சியாகத்தான் இருக்கிறார்.
  • எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ அப்படி வாழ்ந்து விடு. இறைவனே உன்னை தேடி வருவார்.
  • பிறருக்கு ஈவதெல்லாம், ஒரு மனிதன் தனக்குத் தானே ஈவதாகும்.
  • குருவைத் தேடி நல்ல சிஷ்யர்கள் அலையக்கூடாது. சிஷ்டியனை தேடித்தான் குரு வரவேண்டும்.
  • காசியில் இறந்தால் முக்தி என்பது தவறு. காசி எனும் புருவமத்தியில் மனதை நிறுத்தி இருந்தால் முக்தி என்பதே சரி.
  • "நான்" என்ற தனித்தன்மை ஒழிந்தபின் அங்கே சித்தன் முளைக்கிறான்.
  • தவறை செய்கின்ற மனிதனுக்கு இருக்கும் மனஉறுதி, நல்லதை செய்கின்ற மனிதனுக்கு ஏன் இல்லாமல் போகின்றது?
  • மனிதர்கள் செய்கின்ற உதவி கோடைக்கால கூரைபோல் அன்றி மழைக்கால கூரை போல் இருக்கவேண்டும்.
  • எந்த மந்திரமும், கவசமும் சுயநலம் இன்றி, பொது நலத்துக்காக கூறினால், பலமடங்கு உடன் பலனளிக்கும்.
  • சவத்தை, சிவமாக்கத்தான் தினமும் காலை நீராடல்.
  • உள் அதிர்வு மனிதனை உணர்த்தும், உள் அமைதி சிவத்தை உணர்த்தும்.
  • சொத்து சேர மனிதனுள் அகம்பாவம், சித்தம் சேர மனிதனுள் சிவபாவம்.
  • புண்ணியம் சேர்ப்பதால், கர்மாக்கள் நீற்றுப்போகும்!
  • இறை பாதத்தில் பூவிட, இறை சேர்ந்தோர் ஆசீர்வதிப்பர்.

Comments

Popular Posts