How to recite kanda shanti kavasam 36 times a day

 One has to recite the aksharams formed by saravanabava which gives 6 aksharams and one has to recite each aksharam 6 times and have to recite kanda shasti kavasam 1 time.

Description is given below in tamil language below

36 முறை கந்த சஷ்டி கவசம் சொன்னால்*l என்ன நடக்கும் தெரியுமா?


கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர் பால 

தேவராய ஸ்வாமிகள் 


இவர் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோவிலில் வைத்து முருகனுக்குரிய இந்த முக்கிய பாடலை இயற்றினார்.


இன்று உலகம் முழுவதும் கோவில்களில் கந்த சஷ்டி கவசம் ஒலிக்காத இடமே இல்லை. 


சூலமங்களம் சகோதரிகள் குரலில் எங்கும் இந்த பாடல் ஒலித்துக்

கொண்டிருக்கிறது.


இப்படிப்பட்ட கந்த சஷ்டி கவசத்தின் பாடல் வரிகளில், 


ஒரு நாள் முப்பத்தாறுரு கொண்டு ஓதியே ஜெபித்து உகந்து நீறணிய 

அஷ்டதிக்குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்


என்ற வரிகள் வரும்.


இந்த கந்த சஷ்டி கவசத்தை 36 முறை சொல்லிவிட்டு விபூதி தரித்து முருகனை நினைத்து வணங்கினால் மிகப்பெரும் சக்தி கிடைக்கும் என 

ஆன்மிக பெரியவர்களால் சொல்லப்படுகிறது.


பிரபல ஆவியுலக ஆராய்ச்சியாளர் திரு.விக்ரவாண்டி ரவிச்சந்திரன் இதை ஒருமுறை முயன்று பார்த்தாராம்.


36 முறை அவர் கந்த சஷ்டி கவசத்தை சொல்லி முடித்த பின்பு 

அவர் வீட்டின் அருகே உள்ள பூனை சாதாரணமாக அங்கிருந்த கிணறை தாண்டி செல்வதை பார்த்து வியந்தாராம். 


இந்த பூனைகீழே விழாமல் சர்வ சாதாரணமாக தாண்டி செல்கிறதே விழுந்து விட்டால் 

என்ன செய்வது என யோசித்துள்ளார்.


சிறிது நேரத்தில் அந்த பூனை உள்ளே விழுந்து விட்டதாம்


உடனே பூனையை காப்பாற்றி விட்டார்களாம்.  


இப்படியாக நடக்கபோகும் நிகழ்வுகள் கூட நமக்கு ஈஎஸ்பி பவர் போல கந்த சஷ்டி கவசத்தை 36 முறை  படித்தால் தெரிய வரும் என்று சொல்லப்படுகிறது


*கந்த சஷ்டிக் கவசத்தை* *தினமும் 36 முறை* *எளிமையாக சொல்வது* 

*எப்படி*?


*சரவணபவ என்கிற* *முருகனின் அட்சரம்*

*பற்றி அறிந்திடாத* *தகவல்கள்*!


முருகன் இரண்டு வடிவங்களில் நமக்கு

காட்சியளிக்கிறார்.


1. ஒருமுகம்


2. சண்முகம் (6 முகம்)


இதில் ஒருமுகம் கொண்டவர் சுப்ரமணிய

சுவாமி ஆவார். 


இவர் வள்ளி

தெய்வானையுடன் ஒருமுகத்தோடு

அருள்பாலிக்கிறார். 


அவருடைய

அட்சரம்தான் 

*சரவணபவ*என்பதாகும்.


அதேபோல ஆறுமுகம் கொண்டவரை

சண்முகம் என்று சொல்வார்கள். 


இந்த ஆறுமுகம் கொண்ட கடவுளின் அட்சரம்

*சரவணபவ*

*ரவணபவச*

*வணபவசர*

*ணபவசரவ*

*பவசரவண*

*வசரவணப*


ஆறுமுகம் கொண்ட

இந்த சண்முகநாதரை எதற்காக வழிபடலாம்?


வெற்றி, வீரம், பராக்கிரமம் ஜாதகத்தில்

6ம் இடத்தை சரி செய்து கொள்வதற்கு இந்த சண்முக கடவுளை வழிபடுவது

உத்தமம் ஆகும். 


இந்த சண்முகக்

கடவுளுக்கு ஒரு 

சக்கரம் உள்ளது. 


இது 36 அட்சரங்களைக் கொண்டதாகும்.


ஏனெனில் 

முருகனின் பெயரை

சடாட்சரன் என்றுதான் சொல்வார்கள்.


அட்சரம் என்றால் எழுத்து. 


ஆறுஅட்சரங்களுக்கு உரியவரே முருகன்.


இந்த அட்சரங்களில் 

36 அட்சரங்களைக்

(எழுத்துக்களை)

கொண்ட எந்திரங்கள் எங்கிருக்கிறது என்றால்

இரண்டு கோவில்களில் உள்ளது. 


அதில் ஒரு கோவில் திருப்போரூர். 


இது முருகன்

போர் புரிந்த தலமாகும். 


இந்த தலத்திலே

முருகனுக்கு தனிப்பட்ட முறையில்சக்கரம் 

ஒன்று உள்ளது. 


எதிரிகள் தொல்லை மற்றும் நோய் நொடிகளில்

இருந்து விடுபட 

36 அட்சரங்களைக்

(எழுத்துக்களை)

கொண்ட இந்த எந்திரசக்கரத்திற்கு நீங்கள் அபிஷேகம் செய்து பலன் பெறலாம்.


அதேபோல மற்றொரு 

36 அட்சரங்களைக்

(எழுத்துக்களை)

கொண்ட எந்திரம்

உள்ள கோவில்

மதுராந்தகம் பக்கம் பெரும்பேர்

கண்டிகை என்ற ஊர். 


அந்த ஊரில் சிறிய

குன்று இருக்கும். 


அதன்மேல் முருகன்

அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.


அதன் தலவிருட்சம் ருத்ராட்சம் ஆகும்.


இந்த ஆறுமுகக் கடவுளுக்கு எதிரிகளை

வீழ்த்தவும், 

செவ்வாய் தோஷம்

நிவர்த்தியாகவும், 

ஜாதக தோஷம்

நீங்கவும், உடல் ஆரோக்கியம்

பெறுவதற்கும் சத்ரு சம்ஹார ஹோமம்

செய்யலாம். 


இந்த ஹோமத்தில் மலர்கள் ஆறு, 

தருக்கள் ஆறு, 

விதைகள் ஆறு

போன்ற பொருட்கள் எண்ணிக்கை ஆறு

கொண்டதாகப் பயன்படுத்தப்படுகிறது. 


இதையே கந்தசஷ்டி கவசத்தில்


*ஒருநாள்* 

*முப்பத்தாறுரு* 

*கொண்டு*

*ஓதியே செபித்து 

*உகந்து நீறணிய*

*அஷ்டதிக்குள்ளோர்* *அடங்கிலும் வசமாய்த்*


என்ற வரிகளில் வருகிறது.


36 உரு என்று

சொல்லுவதன் அர்த்தம்

36 தடவை கந்தசஷ்டி

கவசத்தை சொல்ல வேண்டும் என்பது

கிடையாது. 


சரவணபவ

ரவணபவச

வணபவசர

ணபவசரவ

பவசரவண

வசரவணப

என்கிற

36 அட்சரங்களில்

ஒவ்வோரு அட்சரத்தையும்

6 முறை ஜெபித்து மொத்தம் 36 முறை ஜெபித்து விட்டு, 

கந்தசஷ்டி கவசத்தை

ஜெபித்தால் கந்த சஷ்டி கவசத்தை 36 தடவை ஜெபித்த முழுபலன் கிடைக்கும் என்பதுதான் இதனுடைய அர்த்தம்.


முருகனுக்கு உகந்த 

சஷ்டி திதியன்று

சத்ரு சம்ஹார

ஹோமத்தை செய்தால்

மிகப்பெரிய பலன், குழந்தைப்பேறு,

அறிவுக்கூர்மை, நோய்நொடி இல்லாத

ஆரோக்கியமான வாழ்வு, மனோபலம்,

எதிரிகளின் தொல்லையில் இருந்து

விடுதலை, ஆயுள் ஆரோக்கியம்

அனைத்துமே கிடைக்கும். 


கடன் தொல்லை, 

நோய் தொல்லை

குறைவதற்கு தேய்பிறை சஷ்டி திதியைப்

பயன்படுத்திக் கொள்ளலாம்.


இதேபோல் வாழ்க்கையின்

வளர்ச்சிக்கு வளர்பிறை சஷ்டி திதியை

பயன்படுத்தி கொள்ளலாம்.

Comments

Popular Posts