அப்பனே! ஒன்றை தெரிந்துகொள் அப்பனே! காலங்கள் அனைவருக்கும் உண்டு, அப்பனே! ஆனால், இறைவன் கட்டங்கள் வைத்துத்தான் திருத்துவான் என்பேன். இவைகளெல்லாம், மிக மோசமாகவே, இதற்கு முன் நடந்ததப்பா! அப்பொழுது தொலை நோக்கி பார்வைகள் இல்லையப்பா. அனைத்தையும் மறைத்து விட்டார்கள். இப்பொழுது கையிலே இருக்கின்றதப்பா (செல்போன்). அப்பனே! இருக்கும் இடத்தில் கொடுப்பது (அன்னதானம்) மிகச்சிறப்பானது! அப்பனே! பொதுநலத்துக்காக விளக்கு ஏற்றுவது மிகுந்த பலனைத் தரும்! அப்பனே! எங்கு சென்றாலும், கடைசியில் வரவேண்டியது என்னிடத்தில் தான்! அப்பனே! ஒரு நொடியில் என்னால் அனைத்தையும் கொடுக்க முடியும். அதை கொடுத்தால், பக்குவங்கள் இல்லை என்றால், பயனில்லை அப்பனே! கட்டங்கள் கொடுத்தால்தான், பக்குவநிலை அடைய முடியும் அப்பனே! அதனால், யானே கொடுத்துவிட்டு, யானே பின்னர் வருந்தும் நிலை வந்து விடக்கூடாது என்பதற்காகவே அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். அப்பனே! எது என்று அறிய! அறிய! மனிதன் என்றாலே இப்படித்தான். அப்பனே, வாழ வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே! உலகத்தில் பிறந்து, பிறந்து! அதனால் தான் அப்பனே...