Pathigam for job
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. 01 அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர் எரியர் ஏறுகந் தேறுவர் கண்டமுங் கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும் பெரிய ராரறி வாரவர் பெற்றியே. 02 வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாயிலர் தம்மையே சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால் எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ. 03 ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங் கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார். 04 ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின் சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே. 05 ஆடும் மெனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம் பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக் கேடும் பிறப்பும் அறுக்கும் மெனக்கேட்டீ ராகில் நாடுந் திறத்தார்க...