சடையாய் எனுமால் சரண்நீ யெனுமால் விடையாய் எனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள் உள்மெலிவே. 01 சிந்தா யெனுமால் சிவனே எனுமால் முந்தா யெனுமால் முதல்வா எனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள் ஏசறவே. 02 அறையார் கழலும் அழல் வாயரவும் பிறையார் சடையும் உடையாய் பெரிய மறையார் மருகல் மகிழ்வா யிவளை இறையார் வளைகொண் டெழில் வவ்வினையே. 03 ஒலிநீர் சடையில் கரந்தா யுலகம் பலிநீ திரிவாய் பழியில் புகழாய் மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை மெலிநீர் மையள் ஆக்கவும் வேண்டினையே. 04 துணிநீல வண்ணம் முகில் தோன்றியன்ன மணிநீலகண்டம் உடையாய் மருகல் கணிநீலவண்டார் குழலாள் இவள்தன் அணிநீல ஒண்கண் அயர்வு ஆக்கினையே. 05 பலரும் பரவப்படுவாய் சடைமேல் மலரும் பிறை யொன்றுடையாய் மருகல் புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்து அலரும் படுமோ அடியா ளிவளே. 06 வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவாள் உடையாய் மருகல் பெருமான் தொழுவா ளிவளைத் துயர் ஆக்கினையே. 07 இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத் துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய் வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான் அலங்க...
Remedies revealed by ancestors and ancient rishis